அடம்பிடித்த வடிவேலு, இயக்குனர் ஷங்கருக்கு ஆட்டம் காட்டிய வடிவேலு – புகார் கொடுத்த ஷங்கர் !

0
1918
vadivelu

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆக்ஸ்ட் மாதம் துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்புதேவன் இயக்க, இயக்குனர் ஷங்கர் தயாரித்து வந்தனர்.
vadivelu படத்தில் சூட்டிங் துவங்கி 10 நாட்களில் நின்றுவிட்டது. இதற்கு காரணம் வடிவேலு தான் என புகார்கள் வந்தது. மேலும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே பெயர் குறிப்பிடாமல் வடிவேலுவைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் வந்துள்ளது எனக் கூறினார். அந்த காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னரே படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் வடிவேலு. படத்திற்க்கான சூட்டிங் துவங்கும் முன்னர் படக்குழுவில் தனக்கு வேண்டியவர்கள் இல்லை என கிட்டத்தட்ட 25 பேரை நிராகரித்துள்ளார் வடிவேலு. பின்னர் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட, அடுத்தடுத்து சில பிரச்சனைகல் ஏற்ப்பட்டு நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது.
Vadiveluஅதன் பின்னர் அவருக்கு தெரிந்த காஸ்டியூம் டிசைனர் தான் வேண்டும் எனவும் கூறி பிரச்சனை செய்துள்ளார் வடிவேலு,

அதுவும்  ஒரு வழியாக செய்து தரப்பட, ஆனால், வடிவேலு வைத்த அந்த காஸ்டியூம் டிசைனர் இயக்குனர் சிம்புதேவனின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என வடிவேலுவைத் தவிற வேறு காஸ்டியூம் டிசைனர் வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளார். இதனால் கடுப்பான அந்த பழைய காஸ்டியூம் டிசைனர் அவரது சங்கத்தில் புகார் செய்ய அந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.
director shankarமேலும், தற்போது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் 10 நாட்கள் மட்டுமே நடித்துள்ள வடிவேலு, தயாரிப்பாளர் ஷங்கருக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியதும் படத்திலும் நடித்து தர மறுப்பதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துவிட்டார் ஷங்கர். தற்போது பஞ்சாயத்து வடிவேலுக்கு நெருக்கமான விஷாலின் கையில் உள்ளது.