ராமச்சரன் படத்திற்கு Pan இந்திய லெவலில் புரியும்படியான தலைப்பை வைத்துள்ள ஷங்கர். என்ன ஒரு ஐடியாபா.

0
290
shankar
- Advertisement -

ராம்சரண்- ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். அதோடு இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் ராம் சரண் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் படத்தில் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து இருந்தார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தை ஒரு கலக்கு கலக்கி இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சீரஞ்சிவி, பூஜா ஹெக்டே உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தற்போது ராம் சரண் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு’ சொல்லிட்டார் லோகேஷ் – விக்ரம் பட அனுபவம் குறித்து காயத்ரி. (அட, இவருக்கு ஜோடியா தான் நடிக்கிறாரா)

- Advertisement -

சங்கர் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான் இயக்குனர் ஷங்கர். இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவராக ஷங்கர் திகழ்கிறார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்து இருந்தார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை இவர் பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார். தற்போது சங்கர் அவர்கள் ராம் சரணை வைத்து இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டு இருந்தது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

சங்கர்-ராம் சரண் கூட்டணி:

இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன் லால் நடிக்க மறுத்து விட்டாராம். ஏன்னா, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கதை கேட்ட பிறகு நடிகர் மோகன்லால் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இது ராம்சரனின் 15 வது படமாகும். அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்திய படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைத்து இருந்தார்கள். அதற்கு பிறகு இந்தியன்2 படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். தற்போது ராம்சரன் படத்தில் தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தைப் பொருத்தவரை ராம்சரண் கிராமம் மற்றும் நகரப் பின்னணியில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். விவசாயி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆகிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் சங்கர் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம்.

படத்தின் டைட்டில் குறித்த தகவல் :

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்திற்கு அதிகாரி என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏன்னா, அனைத்து மொழிகளுக்கும் புரியும்படியான ஒரு பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு யோசித்து தான் அதிகாரி எனும் தலைப்பை படக்குழு இறுதி செய்துள்ளதாம். அதாவது படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி ஆக உள்ளதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் எனவும் கூறி இந்த முடிவை எடுத்திருக்கிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement