பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அந்நியன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியில் ரன்வீர் சிங்கை ரீ-மேக் செய்ய உள்ளதாக நடிகர் ஷங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை தன்னிடம் பெறாமல் ஷங்கர் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் சங்கர் தன் பங்கிற்கு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அந்நியன்’ படத்துக்கு உரிமை கோரி நீங்கள் அனுப்பிய இ-மெயிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டமே அனைவருக்குமே படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன் தான் இந்தப் படம் திரையரங்கில் வெளியானது.

இதையும் பாருங்க : குழந்தை இருக்கும் நிலையில் திருமணமான காவல் அதிகாரியுடன் இரண்டாம் திருமணம் – தற்போது அவர் மீதே புகார். (அவருக்கு 2 பசங்க)

Advertisement

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. எனவே இந்த திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. அதில் யாரும் குறுக்கிட முடியாது.மறைந்த எழுத்தாளர் சுஜாதா இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுதுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான அங்கீகாரமும் கொடுக்கப்பட்டுவிட்டது. திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கிருக்கிறது. நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்தவிதமான உரிமைகளையும் கோர முடியாது.

படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. அந்த உரிமை உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில் படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ‘அந்நியன்’ படம் மூலம் தயாரிப்பாளர் என்ற முறையில் கணிசமான லாபம் அடைந்துள்ளீர்கள். இப்போது உங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப்பார்க்கிறீர்கள் என்று கூறியுள்ளார் ஷங்கர்.

Advertisement
Advertisement