குழந்தை இருக்கும் நிலையில் திருமணமான காவல் அதிகாரியுடன் இரண்டாம் திருமணம் – தற்போது அவர் மீதே புகார். (அவருக்கு 2 பசங்க)

0
49614
radha
- Advertisement -

காவல் துறை ஆய்வாளரான தனது கணவர் தன்னை அடித்து துண்புறுத்துவதாக ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
AMP

இப்படி ஒரு நிலையில் காவல் துறை ஆய்வாளரான தனது கணவர் தன்னை அடித்து துண்புறுத்துவதாக ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

- Advertisement -

முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ள ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

வசந்த ராஜன் திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நடிகை ராதாவை வசந்தராஜன் அடித்து துன்புறுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement