தமிழில் ஐ என்பதற்கு இதான் அர்த்தம், நீதி மன்றத்தில் விளக்கம் அதனை நிராகரித்து நீதிபதி சொன்ன காரணம்.

0
808
i
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், சீயான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட வேடங்களையும் எதையும் துணிந்து செய்வார் என்று நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் “கோப்ரா” படத்தில் நடித்து இருந்தார். இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்து இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில்நடித்து இருந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை போலவே இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவான “ஐ” படம் தொடக்கத்தில் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை, விமர்சன ரீதியாகவும் பெரிய அடி வாங்கியது என்றாலும் பின்னர் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஐ படத்திற்கு வரி விலக்கு மறுத்த புதுச்சேரி அரசு :

இந்த நிலையில் தான் “ஜ” படத்தை புதுச்சேரியில் வெளியிட விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் விநியோக உரிமையை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு கேளிக்கை வரி அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னையில் உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்,சுப்பிரமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

-விளம்பரம்-

உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் :

இந்த வழக்கிற்கு புதுச்சேரி அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் “ஐ” என்பது தமிழ் வார்த்தை கிடையாது எனவே இந்த படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கொடுக்க முடியாது என கூறினார். இதனையடுத்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் “ஐ” என்பது தமிழில் வியப்பை ஏற்படுத்தும் வார்த்தை என்று வாதிடவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் தலைப்பு தமிழில் வைப்பதை ஊக்குவிக்கவே அரசு கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்கிறது.

வழக்கு தள்ளுபடி :

மேலும் அரசு கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழில் படத்தின் பெயர் இருந்தால் மட்டுமே கேளிக்கை வரிக்கு அரசு விலக்கு அளிக்கும். அதே போல படத்தின் பெயர் தமிழில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்க்காக கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம் என்று ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவை தள்ளிப்படி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

Advertisement