குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்..! உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா

0
153
Shariq
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது.

Aishwarya-dutta

இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா ரியாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

- Advertisement -

அப்போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது குறித்து கேள்வி கேட்ட போது அதற்கு பதிலளித்த ஷாரிக் ‘ஒரு மனிதனாக அதை செய்திருக்க கூடாது. இது டாஸ்க் தான் என்றாலும் குப்பை தான் கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அதே போல ஐஸ்வர்யா ஷாரிக்கை தான் பாலாஜி மீது குப்பை கொட்ட சொல்லி இருப்பார். ஆனால், ஷாரிக் அதனை மறுத்ததோடு, ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டிய போது தடுக்கவும் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya

மேலும், உமா ரியாஸ் அளித்த இந்த பேட்டியில் அவரிடன் சில கேள்விகளும் கேட்கப்பட்டது அதற்கு உமா ரியாஸ் சில சுவாரசியமான பதிகல்களையும் அளித்தார்.

கேள்வி: இப்போ இருக்கிற சூழ்நிலையில நீங்க பெண் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள் இருந்தா என்ன ஆகி இருக்கும்.

பதில் : தாறு மாறா ஆகி இருக்கும். அது மட்டும் எனக்கு தெரியும். நெஜமாகவே ‘தாறு மாறு, தாறு மாறாக மாறி இருக்கும்.

கேள்வி: பாலாஜி மீது குப்பை கொட்டும் போது ஷாரிக்கிற்கு பதிலாக நீங்க இருந்தீங்கனா என்ன செஞ்சி இருப்பீங்க ?

பதில்:- திருப்பி மேல கொட்டி இருப்பேன்.அத தான் செஞ்சி இருப்பேன். ஒரு வேலை நான் போட்டியாளராக இருந்திருந்தால், எனக்கு எலிமினேஷன் வந்திருந்தாலும் நான் பரவாயில்லை என்று அவர் மீது குப்பையை கொட்டி இருப்பேன்.

Uma

இதையும் படிங்க: குப்பை கொட்டும் பொது நான் இருந்திருந்தா இது நடந்திருக்கும் .! நான் இதை செய்திருப்பேன்.! நித்யா அதிரடி.!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யாவிடம், பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை குறித்து கேட்ட போது ‘ஒரு வேலை நான் அங்கு இருந்திருந்தால் நான் ஐஸ்வர்யாவை தடுத்திருப்பேன் என்று தான் கூறியிருந்தார். ஆனால், உமா ரியாஸ் ஐஸ்வர்யா மீதே குப்பை கொட்டி இருப்பேன் என்று கூறியுள்ளது சற்று ஆச்சர்யமான விடயமாக உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யாவின் இந்த செயல் குறித்து பலரும் பல்வேறு பார்வையில் உள்ளனர் என்றும் ,அவரவருக்கு ஏற்றார் போல குணாசித்தியங்கள் மாறும் என்பதும் கொஞ்சம் தெளிவாகவே புலப்படுகிறது.

Advertisement