இதுகுறித்து நித்யா பதிலளிக்கையில் 'ஒரு வேள நான் அங்க இருந்திருந்தா இத விட பெரிய சண்ட நடந்திருக்கும். ஏன்னா ஐஸ்வர்யா செஞ்சது மனிதாபமற்ற செயல். அது என்னோட கணவர்ன்றதுகாக சொல்லல அது யாரா வேணுனா இருக்கட்டும் நான் அந்த எடத்துள ஐஸ்வர்யாவ கண்டிப்பா கேள்வி கேட்டிருப்ப. என்னதா ராணி-னு அவருக்கு அதிகாரம் இருந்தாலும் ஒரு குப்ப தொட்டில இருக்க குப்பையை எடுத்து ஒருத்தர் மேல போட்ற அளவிற்கு அவருக்கு பவர் கொடுக்கல. அது பாக்க கொஞ்சம் அருவருப்பா இருந்துச்சி
எனக்கு பாலாஜிய அப்போ பாக்கும் போது கொஞ்சம் ஆச்சரியமா இருந்துச்சி. நான் அவர் கூட 9 வருஷம் வாழ்ந்திருக்க அவரோட கோவம் என்னனு தெரியும். ஆனா அவர் மேல குப்பை கொட்ட சொல்ல அமைதியா இருந்தது அவர் 50 பர்சண்ட் மாறிட்டாரோன்னு தோணுச்சு. அவர் தன்னோட சுய மரியாதையா இழந்து அசிங்கபட்ரத பாக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்கு என் பிரஸ்சோட போய் கதவ தட்டி அவர வெளிய கூட்டின்னு வந்துடலாம்னு கூட எனக்கு தோணுச்சு '' என்று தெரிவித்திருந்தார்.
என்னதான் பாலஜிக்கும்,நித்யாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மோதல்கள் இருந்து வந்தாலும் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர் . ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவிடம் கடுமையாக நடந்து வந்த பாலாஜி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது அக்கறை காட்டி வந்தார். இந்நிலையில் பாலாஜிக்காக , நித்யா ஆதரவாக பேசியுள்ளது பாலாஜி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.




