ஷாரிக் சொன்ன ஒரு வார்த்தை..!கட்டிப்பிடித்து அழுத மும்தாஜ்..! பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

0
682
shariq

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடி கொண்டு வருகிறது.

shariq-hassan big boss

இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நித்யா, பாலாஜி ஆகியோரை வைத்தே நகர்ந்து விட்டது. அதே போல சமீப எபிஸோடுகளில் மும்தாஜ் மற்றும் ஷெரிக் மீது பிக் பாஸ் கேமராவின் பார்வை அடிக்கடி திரும்பி வருகிறது. மும்தாஜ் மட்டும் தான் அடிக்கடி மற்ற போடியாளர்களிடம் வாக்குவத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அடிக்கடி அழுது விடுகிறார். மும்தாஜ் அழுதாலும் ஷாரரிக் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை நடிகர் கமல் அகம் டீவி வழியாக அடிக்கடி சந்தித்து பேசுவார். அது போல நேற்று கமல் போ ட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது ஷாரிக், மும்தாஜ் மேடம் எனக்கு அம்மா போன்றவர் என கூறியுள்ளார். இதனை கேட்ட மும்தாஜ் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழ அதனை கண்ட ஷாரிக்கும் அழ ஆரம்பித்து விட்டார். பின்னர் சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

mumtaz

ஷாரிக் தான் ஆண் போட்டியாளர்களிலேயே கடைக்குட்டி என்பதால் பெண் போட்டியாளர்கள் அவரை செல்லமாக பார்த்துக் கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா ஷெரிக்கை தனது மடியின் மீது படுக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷாரிக்கிற்கு அவரது அம்மா ஞாபகம் வந்துடிச்சி போல அதனால் தான் அவர் நேற்று அழுதுவிட்டார் என்று போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.