மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகியவுடன் படத்தில் உள்ள ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றிய காட்சிகளில் உள்ள உண்மை பொருக்காமல் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் படத்தில் உள்ள அந்த காட்சிகளை நீக்க போராடி வந்தனர்.

தற்போது அந்த காட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் MP சத்ருகன் சின்ஹா. அவர் கூறியதாவது,
“படத்தில் எழுப்பட்டது நியாயமான கேள்விகள். ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகள் மக்களின் மனதை பிரதிபளிக்கிறது. அதனை ஏன் பா.ஜ.கவினர் எதிர்க்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் இது போன்ற படங்களுக்கு ஆதரவு தருவதை விட்டுவிட்டு படத்தில் நடித்த நடிகரைத் திட்டுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.”

Advertisement

இதையும் படிங்க: காருக்கு வரி கட்ட அமலா பால் செய்த தில்லு முள்ளு !

“மக்களுக்கு இலவச மருத்தும் தர வேண்டும் என ஒரு மக்கள் அறிந்த நடிகர் கூறுவதை பாராட்ட வேண்டும். பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அமைதியாக இருக்கும் போது ஒரு சிலர் கட்சிக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்க்காக இப்படி செய்வது நல்லதல்ல.”

Advertisement

“படத்தில் விஜய் கூறிய அந்த தரமான மருத்துவத்தைப் பற்றி பேசி அரசு அதனை நடைமுறைப்படுத்த சிந்திக்க வேண்டும். அப்படி படத்தை எதிர்த்து செய்த கண்டனத்திற்கு குறிப்பிட்ட சிலர் மன்னிப்பு கேட்க வேண்டம்” ஏன தமிழ பா.ஜ.க தலைவர்களை சாடினார் சத்ருகன் சின்ஹா

Advertisement
Advertisement