போட்டியாக வந்த தனுஷ் படம்..!நன்றி மறவாத சிவகார்த்திகேயன் செயல் ..!குவியும் பாராட்டு..!

0
587
Shivakarthikean

ஒரு சாதாரண மேடை கலைஞராக தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சிக்கு நடிகர் தனுஷ் ஒரு மிகப்பெரிய உந்துகோலாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.

இடைப்பட்ட காலத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு மனகசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்ற சில பேச்சுகளும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல் சிவகார்திகேயன் படங்களை தயாரிப்பதை நிறுத்தினார் தனுஷ்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது கனா படம் வெளியாகியுள்ளது. மேலும், அதே சமயம் தனது குருநாதரான தனுஷின் மாரி 2 படமும் வெளியாகியுள்ளது. கூடவே ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படமும் வெளியாகியுள்ளது.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன், தான் தயாரித்த படத்திற்கு போட்டியாக வந்த படங்களான மாரி 2, அடங்கமறு, சிலுக்குவர்பட்டி போன்ற படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சக கலைஞர்களின் படங்களை போட்டியாக கருதாமல் சிவகார்த்திகேயன் வாழ்த்துகூறியுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.