ஸ்ரீ படத்தில் நடித்த தேங்கா ஸ்ரீனிவாசன் பேத்தியா இது – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
4152
shruthika
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். நடிகர் தேங்காய் ஸ்ரீனிவானுக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் தான் என்பது பலபேர் அறிந்திடாத ஒன்று.நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியின் பெயர் ஸ்ருதி, சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், முதல் படமே படுதோல்வியடைந்தது.அதன் பின்னர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படஙக்ளில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ஸ்ருதி. நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிகா அடையாளம் தெரியாத அளவு ஆளே மாறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், அந்தப் பேட்டியின் போது தொகுப்பாளர் நடிகை ஸ்ருதி காவியம் உங்கள் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக சென்றடைந்தது என்று கூறினார் அதற்கு பதில் கூறிய ஸ்ருத்திகா இதையெல்லாம் சொல்லாதீர்கள் நானே மொக்கையாகத்தான் நடித்தேன்.

நான் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. நீங்கள் இந்த பேட்டிக்கு நன்றாக தயாரித்து தான் வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது என்று கூறி சிரிக்கிறார் ஸ்ருதிகா.

-விளம்பரம்-
Advertisement