தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகைஸ்ரேயா சரன். சில வருடங்களுக்கு இவர் முன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பாலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். நடிகை ஸ்ரேயா அவர்கள் கடைசியாக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். பின் 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயா அவர்கள் உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
சண்டக்காரி படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று இருந்த நடிகை ஸ்ரேயாவை போலீசார் கைது செய்தார்கள். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகு இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரேயா அவர்கள் “சண்டக்காரி” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சண்டக்காரி படத்தின் படப்பிடிப்பு லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல், ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியிருப்பு பகுதியை நடிகை ஸ்ரேயா அவர்கள் தாண்டி போயுள்ளார். உடனே அங்கிருந்த போலீசார் துப்பாக்கியுடன் ஸ்ரேயாவை சுற்றி சூழ்ந்தார்கள்.
இதையும் பாருங்க : முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் வீடியோவை பதிவிட்ட ஆல்யா மானஸா. வாழ்த்தும் ரசிகர்கள்.
பின் துப்பாக்கி முனையில் ஸ்ரேயாவை போலீசார் கைது செய்தார்கள். அதுமட்டும் இல்லாமல் ‘எப்படி நீங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதிக்குள் சென்றிர்கள் என்றும் பல கேள்விகள் கேட்டார்கள். இதையறிந்த படக்குழுவினர் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய ஆவணங்களைக் காட்டி நாங்கள் படப்பிடிப்புக்காக வந்தோம் என்றும் விளக்கினார்கள். அதற்குப் பின்னர் தான் போலீசார் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர். பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் தயாரிக்கும் படம் தான் சண்டக்காரி.
சண்டக்காரி படத்தை ஆர். மாதேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரேயா அவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, தேவேந்தர் சிங், ரேகா, உமா பத்மநாபன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அம்ரிஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும், குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “மை பாஸ்” என்ற படத்தை தான் தமிழில் இவர்கள் ரீமேக் செய்கிறார்கள். இந்த படம் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
மேலும், தமிழில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்று பல இடங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த படம் வித்தியாசமான ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்கும் என்றும், இந்த படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. அதோடு விரைவில் இந்த படம் திரையரங்குக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் ஸ்ரேயா ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினியராகவும் நடித்து வருகிறார்.