கணவருக்கு கொரோனா அறிகுறி, பிறந்தநாளில் கணவரின் நிலை குறித்து கூறிய ஸ்ரேயா.

By Rajkumar · 15/4/2020

தற்போது கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்து வரும் ஒரு நோயாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நோய் தோற்றால் பல லட்சம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் திணறி வருகின்றனர். பல்வேறு நாடுகளை பதித்துள்ள இந்த வைரஸ் தோற்று ஸ்பெயின் நாட்டையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/B94eARrlF-1/

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : பாம்பே மாடலிங் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம்-னு சொல்லிட்டாங்க. பாரதி கண்ணம்மா நடிகை.

அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது. திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதிருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.தற்போது தனது கணவருடன் ஸ்பெய்ன் நாட்டில் வசித்து வரும் ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதால் அவரை மருத்துவர்கள் சோதனை செய்து உள்ளார்கள்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், என் கணவர் ஆண்ட்ரவிற்க்கு உலர்ந்த இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்கத் தொடங்கியது. இதனால் நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு விரைந்தோம், ஆனால் மருத்துவர்கள் பதற்றமடைந்து எங்களை வெளியேறும்படி வற்புறுத்தினர். ‘அவருக்கு கோவிட் -19 இல்லையென்றாலும், அவர் இங்கேயே இருந்தால் அவர் அதைப் பெறுவார்’ என்று மருத்துவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

இதையும் பாருங்க : இதனால் தான் படங்களிலும், சீரியல்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டேன்- பிரபல தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா.

எனவே நாங்கள் வீட்டிற்குச் சென்று எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெற முடிவு செய்தோம். நாங்கள் வெவ்வேறு அறைகளில் தூங்கினோம், ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை பராமரித்தோம். அதிர்ஷ்டவசமாக, அவர் இப்போது நன்றாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க ஸ்ரேயாவின் கணவர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ஸ்ரேயா, இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவிக்க, ரசிகர் ஒருவர், உங்கள் கணவருக்கு கொரோனா எப்படி இருக்கிறது என்று கேட்க, அதற்கு ஸ்ரேயா, அது கடந்த மாதம் தான், தற்போது நன்றாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full