திருமணத்திற்கு தயார் என்று சொன்ன தமன்னா.! தமன்னாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய பிரபலம்.!

0
1548
Tamanna
- Advertisement -

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி ‘படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமாகியிருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

-விளம்பரம்-

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தமன்னா, ஹிந்தி சினிமா விடும் ஒரு அலட்சியமான நடிகையாக விளங்கி வருகிறார் .இடைப்பட்ட காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகை தமன்னாவிற்கு, பாகுபலி திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்க : திருமணத்திற்கு தயாராகிய தமன்னா.! மாப்பிள்ளை கண்டிப்பா இந்த ஊர் தானம்.!

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் மீண்டும் தனது இழந்த மார்க்கெட்டை பிடித்தார் தமன்னா. அதேபோல சினிமா நடிகர்களுடன் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் நடிகை தமன்னா சிக்கி வில்லை என்றாலும் , கடந்த 2012 ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நடிகை தமன்னா காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

ஆனால், சமீபத்தில் அதனை மறுத்த நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை தமன்னாவை திருமணம் செய்து கொள்ள பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தயாராக இருக்கிறாராம். தமன்னா ஸ்ருதிஹாசன் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவர்.

-விளம்பரம்-

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தமன்னாவை பற்றி பேசுகையில் எனக்குத் தெரிந்து பெண்களில் பேரழகி என்றால் அது தமன்னாதான். நான் மட்டும் ஒரு ஆணாகப் பிறந்திருந்தால் அவரைக் காதலித்துத் திருமணமும் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்

Advertisement