தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தம்மனா. தமிழில் விஜய், அஜித், விஜய், சூர்யா என அணைத்து பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.அதுமட்டுமல்லாமல் தெலுகு, கன்னடம், ஹிந்தி என்று அம்மணி ஒரு ரௌண்டு வந்துவிட்டார்.
ஆனால், சமீபகாலமாக அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. அதனால் ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடும் நிலைக்கு வந்துவிட்டார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் நடித்தாலும் தற்போது அம்மணிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.
தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள கண்ணே கலைமானே என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், நான் தமிழ் பெண் தான். தமிழ்நாட்டில் பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். நடிகை தம்மன்னா லண்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கடந்த ஆண்டு கிசுகிசுக்கபட்டது. ஆனால், அந்த தகவலை மறுத்திருந்தார் தமன்னா மேலும், 2012 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் கோலியுடன் டேட்டிங் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.