ஸ்ருதிஹாசனின் திருமணம் முடிந்துவிட்டதா?- எப்போது, எங்கே? – காதலர் சொன்ன தகவல்.

0
879
sruthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பு சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் .

-விளம்பரம்-
sruthi

மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இறுதியாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார்.

- Advertisement -

ஸ்ருதிஹாசன் பற்றிய தகவல்:

பின் தன் காதலனை அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் சுருதி அறிமுகம் செய்து கூட வைத்தார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். ஸ்ருதியை பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார். ஆனால், காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். பிறகு கடந்த சில மாதங்களாக ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

ஸ்ருதிஹாசன்- சாந்தனு இடையே உள்ள உறவு:

இதற்கு பலரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். சுருதி காதலிக்கும் சாந்தனு மும்பையை சேர்ந்தவர். அதோடு இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். சமீபத்தில் இவர்கள் காதல் குறித்து சாந்தனுவிடம் பயனர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் கூறி இருப்பது, இப்போது தான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன்- சாந்தனு காதல்:

கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வழிகளிலும் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கும் ஒரு ஆக்கபூர்வமான பயணமாகும். நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கம் அளிப்பதோடு முன்னோக்கி செல்ல உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இது தான் எங்களுக்குள் ஈர்க்கப்பட்டு உறவு. நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம் என்று சாந்தனு கூறி இருந்தார். தற்போது ஸ்ருதிஹாசன் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார் என்று கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன்- சாந்தனு திருமணம்:

இருந்தாலும் சுருதி- சாந்தனு மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கும்-சாந்தனுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தற்போது ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு கூறியிருப்பது, நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக திருமணம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார். இப்படி இவர் அளித்து உள்ள பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, நிஜமாகவே இவர்களக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement