படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடந்து கொண்ட விதத்தால், லாபம் படபிடிப்பில் இருந்து விலகினார் ஸ்ருதி ? விவரம் இதோ.

0
13046

பாலிவுடை போல தமிழ் சினிமாவிலும் பல்வேறு வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒருவர். தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து சுருதி ஹாசன் விலகி இருக்கிறாராம், அதே போல சமீபத்தில் சுருதி ஹாசன் போட்ட டீவீட்டில், கொரோனா என்பது, அனைவருக்குமே பெரும் ஆபத்தான ஒன்று. அந்த பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. படப்பிடிப்பின்போது, கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் ஒரு தனி நபராகவும், ஒரு நடிகராகவும், எனது உடல்நலனுக்கு முக்கியத்துவம் தர, எனக்கு உரிமை இருக்கிறது. இதனை பொதுவாக சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை வைத்து பார்க்கும் போது ‘லாபம்’ படத்தில் இருந்துதான் ஸ்ருதிஹாசன் தற்காலிகமாக விலகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே லாபம் படத்தின் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாகவும் அதேபோல விஜய் சேதுபதி அங்கே குவிந்த ரசிகர்களிடம் கை கொடுத்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் நெருக்கமாக இருப்பதால் கொரோனா பரவல் பரவ வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கையாக சுருதி ஹாசன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement