ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் டிவி பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சி இந்தியில் தான் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.
தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் 8:
அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் இந்தியில் பிக் பாஸ் 18 தொடங்கி இருக்கிறது.
ஸ்ருதிகா குறித்த தகவல்:
வழக்கம்போல் இந்த முறையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறை புதிய ட்விஸ்ட்டாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் பங்கேற்று இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, ஸ்ருதிக்கா. இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஸ்ரீ என்ற படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதற்குப்பின் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
ஹிந்தி பிக் பாஸ்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் பட்டத்தையும் பெற்றிருந்தார். அதற்குப்பின் இவர் தனியாக யூடியூப் சேனலை துவங்கி இருக்கிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் குறித்த தகவல்:
பொதுவாகவே தமிழ்நாட்டு பிரபலங்கள் மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் தான். இதற்கு முன்பு தெலுங்கு பிக் பாஸில் பாபா பாஸ்கர், ஷகீலா, கிரண், பிந்து மாதவி கலந்திருந்தார்கள். அந்த வகையில் தற்போது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா கலந்து இருக்கிறார். இருந்தாலும், இந்தியில் முதல் முதலாக கலந்து கொள்ளும் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் எப்படி தாக்குப் பிடித்து இருக்கிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.