பல ஆயிரம் கோடி சொத்து இருந்தும் 3000 ரூ வேலைக்கு சென்ற அமிதாப் பச்சனின் சொந்த மகள்.

0
508
amithab
- Advertisement -

பல்லாயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப்பச்சனின் மகள் பள்ளி ஆசிரியர் வேலைக்கு சென்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டு இருக்கிறார். இவருடைய நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார்.

- Advertisement -

அமிதாபச்சன் குடும்பம்:

இதனிடையே இவர் நடிகை ஜெயபாதூரியை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஸ்வேதா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு மகள் இருக்கிறார். மேலும், இந்தி திரையுலகிலேயே அதிக சொத்து வைத்து இருப்பவர் அமிதாபச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாபச்சன் சொத்துக்கள்:

அந்த வகையில் இவருக்கு மும்பையில் பல பகுதிகளில் சொந்த பங்களாக்கள் இருக்கின்றது. இவர் தங்கியிருக்கும் வீடு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டது. அந்தளவிற்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார். இவர் மும்பையில் வைத்திருக்கும் பல வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் பிரபல நடிகைக்கு அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28வது மாடியில் உள்ள டூப்ளக்ஸ் வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அமிதாபச்சன் மகள்:

அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது இடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகை கொடுத்துள்ளாராம். இப்படி இந்தி சினிமாவிலேயே அமிதாப்பச்சனுக்கு மட்டும் சுமார் 3396 கோடி ரூபாய் அளவில் சொத்து மதிப்பு இருக்கிறது. இந்நிலையில் அமிதாப்பச்சனின் மகள் 3 ஆயிரம் சம்பளத்திற்கு ஆசிரியர் வேலைக்கு சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அமிதாபச்சனின் மகள் பெயர் ஸ்வேதாபச்சன். இவர் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்வேதா பச்சன்:

இவருக்கு நவ்யா நவேலி என்ற மகள் இருக்கிறார். இவரும் கூடிய விரைவில் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறாரா. இந்நிலையில் சமீபத்தில் ஸ்வேதாபச்சன் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், நான் திருமணத்திற்கு பிறகு ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்திருக்கிறேன். இதற்காக 3000 ரூபாய் சம்பளமும் வாங்கி இருக்கிறேன். தற்போது நான் சொந்தமாக ஒரு பேஷன் லேபிள் நடத்தி வருகிறேன். ஆனால், அதன் கணக்கு வழக்கு எல்லாம் தெரியாது. நான் சின்ன வயதில் இருந்தே பணம் பற்றி விஷயங்கள் எதுவும் தெரியாது. அதனால் என்னுடைய மகளுக்கு இந்த நிலை வரக்கூடாது என்பதனால் அவரையே எல்லா வேலையும் பார்க்க வைக்கிறேன். வீட்டின் தினசரி செலவுகளை கூட அவள் தான் நிர்வாகிக்கிறார்.

Advertisement