விஜய் சொன்னால் நான் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிப்பேன்- உயர்ந்த நடிகர் !

0
2261

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக உச்ச்த்தில் இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்த இரு நட்சத்திரங்களுடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. நடிகர் நடிகைகள் இவர்களுடன் எப்படியாவது நடித்து விட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என வரிசையில் நிற்கின்றனர்.
அதே ஆசை தான், நடிகர் சிபிராஜுக்கும் வந்துள்ளது. தளபதி விஜயுடன் எப்படியாவது நடித்துவிட்டு வேண்டும் என தயாராக உள்ளார் சிபி. இவர் ஹீரோவாக நடித்துள்ள படம் சத்யா. இந்த படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி, ஆனந்தராஜ் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த பட ப்ரோமோன் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிபிராஜ் கூறியதாவது,

தளபதி படத்தில் நடிக்க கூப்பிட்டால் வில்லன் கேரக்டரில் கூட நடித்துவிடுவேன். நமக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தளபதி என்றால் அது இல்லை. எப்படியானாலும் அவருடன் நடித்தால் போதும் எனக் கூறினார் சிபிராஜ்.