நல்லா சாப்பிடுங்க.! யோகி பாபுவிற்கு சித்தார்த் கொடுத்த அட்வைஸ் இது தான்.!

0
797
- Advertisement -

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து.

-விளம்பரம்-
Image result for yogi babu gurka

சமீபத்தில் இவர் நடித்துள்ள ஜாம்பி கூட வெளியாகி இருந்தது. மேலும், விஜய் 63 படத்தையும் சேர்த்து தற்போது கூர்கா, தர்ம பிரபு போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘கூர்கா ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா சார்லி, ஆனந்த்ராஜ், ரவிமரியா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா . 4 மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சித்தார்த்.

Related image

‘என்னைப் பொறுத்தவரை யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. மிகச் சிறந்த நடிகர். அவருடைய லுக்கை வைத்து பலரும் காமெடி பண்ணுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுவும் ஒரு வகை தான் என்று ஏற்றுக் கொண்டு வெவ்வேறு வகையில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார். யோகி பாபு கொஞ்சம் தன் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

வெற்றிகள் வந்தவுடன் கொஞ்சம் பொறுப்புகள் வரணும். நல்லா சாப்பிட்டு, தூங்குங்கள் அதற்காகத்தான் வேலை செய்கிறோம் என்று அட்வைஸ் செய்துள்ளார் சித்தார்த். நடிகர் சித்தார்த் யோகி பாபுவுடன் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement