இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வகையில் திரைப்படம் உருவாகியுள்ளது. 23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் மோடியாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரையும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பிரபல நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தகரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Advertisement

இந்த படத்தினை வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக இருப்பதாகஇருக்கிறது. அதே வேளையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் திரைப்படம் வெளியாவது நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படம் குறித்து ட்வீட் செய்திருந்த சித்தார்த், மோடி படத்தின் ட்ரைலர், மோடி எப்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை ஒற்றை கைப்பிடியால் அழித்து இந்தியாவின் சுதந்திரத்தை வென்றது என்பது பற்றிகூறுவது போல இருக்கிறது. இன்னொரு மலிவான தந்திரம் போலவும் நாகரீகமான நக்சல் வேலை போன்று தான் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

Advertisement

மற்றுமொரு டீவீட்டில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பற்றி கூறியுள்ள சித்தார்த், ஜெயலலிதா அடிப்படையிலான பல படங்களில் எவ்வளவு தங்க மூலம் பூசப்பட்டு வெளியாக போகிறதோ என்று தெரியவில்லை. வரலாறை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது குற்றமில்லை. வரலாறை பொய்யாக கூறினால்தான் குற்றம் என்று ட்வீட் செய்துள்ளார் சித்தார்த்.

Advertisement
Advertisement