அஜித்தை ரோல் மாடலாய் வைத்திருப்பது வேஸ்ட்.! அஜித் ரசிகருக்கு சித்தார்த் கொடுத்த அட்வைஸ்.!

0
1027
- Advertisement -

தமிழில் பாய்ஸ் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்சமயம் ஜி வி பிரகாஷுடன் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துவரும் இவர் டுவிட்டரில் ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் அவ்வப்போது பதிலளிப்பார்.

-விளம்பரம்-

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதையும் படியுங்க : சினிமா வாழ்க்கையை சீரழித்தாரா சத்யராஜ்.! பிரபல நடிகை விசித்ரா ஷாக்கிங் ட்வீட்.!

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை அணியின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டீவீட்டை கண்ட அஜித் ரசிகர் ஒருவர், ஏங்க பொய் சொல்றீங்க, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க?.. என கூற, அதற்கு சித்தார்த், நீ அஜித்தை மதித்திருத்தால், உழைப்பை எவ்வாறு மதிப்பது என்பதை கற்று கொண்டிருப்பாய். இல்லை என்றால் அவரை போல ரோல் மாடலை நீ வைத்திருப்பது பிரயோஜனம் இல்லை என பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement