சினிமா வாழ்க்கையை சீரழித்தாரா சத்யராஜ்.! பிரபல நடிகை விசித்ரா ஷாக்கிங் ட்வீட்.!

0
2035
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90’ஸ் கால கட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் விசித்திரா. ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்

-விளம்பரம்-

அதிலும் சத்தியராஜ் இயக்கி நடித்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் இவர் மினிஸ்டர் அம்சவள்ளியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அதன் பின்னர் இவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை விசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர்,
 முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு என்று மிக மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த விசித்ரா.

எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர், இயக்குநராக அவதாரமெடுத்த தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது 

-விளம்பரம்-
Advertisement