தமிழ் சினிமாவில் அழகாக இருந்தாலும் ஒரு சில நடிகைகள் ஒரு சில படத்திலேயே காணாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை மோனல் காஜரும் ஒருவர். தமிழில் 2014 ஆம் வெளியான “சிகரம் தொடு” படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனல் காஜர். வங்கியில் வேலை செய்து வந்த இவர் பின்னர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ இவரது யோகா ஆசிரியரின் யோசனையால் தான்.
1987 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் வேலை செய்து வந்தார். பின்னர் தன்னுடைய யோகா ஆசிரியரின் அறிவுரைபடி 2011 ஆம் ஆண்டு ரேடியோ மிர்ச்சி நடத்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் குஜராத் பட்டதை வென்றார். இதனால் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டர்.
பின்னர், 2012 ஆம் ஆண்டு வெளியான “டிராகுலா ” எனும் மலையாள படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானார். இவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே 5 படங்களில் ஒப்பந்தம் ஆனார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழில் இதுவரை இவர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தனது சொந்த மண்னான குஜரத்திற்கே சென்று விட்டார். அங்கு ஒரு சில படங்கள் கைகொடுக்க மீண்டும் வேறு மொழி படங்களில் நடிக்காமல், குஜராத் மொழி படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.