அட, கன்றாவியே பின்னாடி ஓருத்தர் இப்படி பண்ணிட்டு இருக்கறத கூடவா கவனிக்கல – கேலிக்கு உள்ளான சூர்யாவின் ரொமான்டிக் பாடல்

0
4354
- Advertisement -

சூர்யாவின் ரொமான்டிக் பாடல் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சூர்யா திரைப்பயணம்:

இப்படி சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா, பூமிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இதனால் இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜில்லுனு ஒரு காதல் படம்:

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற நியூயார்க் நகரம் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. மேலும், இந்த பாடலில் ஒரு காட்சியில் ஒருவர் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டிருந்தார். இதை கவனிக்காமலேயே பாடலை எடுத்திருக்கிறார்கள். ஒரு அழகான ரொமான்டிக் பாடலில் இந்த மாதிரி எல்லாம் காட்சி இருப்பதா? என்றெல்லாம் விமர்சித்து நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சூர்யா நடிக்கும் படம்:

தற்போது சூர்யா அவர்கள் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படம் குறித்த தகவல்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாக இருக்கிறது. இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

Advertisement