ஆகஸ்ட் மாதத்தில் சிம்பு திருமணமா.! அவரே வெளியிட்ட அறிக்கை.!

0
742
Simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டாராக விளங்கி வரும் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவை பல ஆண்டுகாலமாக சுற்றி வரும் செய்தி என்னவெனில் அவர், எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்பது தான்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலித்த பெண்ணிற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறி இருந்தார் குறளசரன். இந்த திருமணம் முடிந்ததும் அனைவரின் கேள்வியாக இருந்தது சிம்புவின் திருமணம் எப்போது என்பது தான்.

இதையும் படியுங்க : ஸ்ரீரெட்டியின் புதிய சர்ச்சையில் சிக்கி சிறழிந்து வரும் பிரபல ஸ்டார் நடிகர் வாழ்க்கை.

குறலரசன் திருமணம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த டி ராஜேந்தர்’ கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் கண்டிப்பாக  திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் சிம்பு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக சில செய்திகள் வெளியாகின.

-விளம்பரம்-

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு, அதில் ‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமா வழக்கையும் பற்றி பல வதந்திகள் போய் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்துகொள்ள எண்ணம் இல்லை. அப்படி வந்தால் அதனை முறையாக அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement