எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.! சிம்பு யார் தெரியுமா.!

0
1032
Simbhu-Aravind-Swamy
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சிம்பு தற்போது அரை டஜன் படங்களை தனது பாக்கெட்டில் வைத்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வரும் சிம்பு தற்போது மற்றுமொரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்த படம் எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for m g r and m r radha

அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் பாருங்க : உடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட்.! நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.! 

- Advertisement -

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை தொடர்ந்து எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது. அந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். மேலும், அந்த படத்தை எம்ஆர் ராதாவின் பேரனான ஜக் இயக்குகிறார். இவர், ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இதில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும், எம் ஆர் ராதா கதாபாத்திரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்க உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement