படம் தான் காப்பின்னு பார்த்தா இத கூடவா சிம்பு காபி அடிப்பார்.! வைரலாகும் புகைப்படம்.!

0
640
Simbu

சிம்பு தற்போது கௌதம் கார்த்திக்குடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கன்னடத்தில் மஃப்டி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய நார்தன் இயக்க உள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கன்னடத்தில் மஃப்டி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் சிம்பு -கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்பு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து வெகட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக இங்கிலாந்து நாட்டில் தங்கி உடலைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சிம்பு தனது உடல் எடையையும் குறைத்தார்.

இதையும் பாருங்க : தாஜ்மஹால் பட நடிகையா இது.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.! 

இந்த நிலையில், சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டபட்டுள்ளது.ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம். ‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த திகில் படமாக இது தயாராகிறது. படத்தில் சிம்புவை இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் பார்க்கலாம். மேலும், இந்த படத்தில் நடிகர் சிம்பு தண்டர்போல்ட் தாதாவாக நடிக்கிறார் அவரை கைது பண்ண துடிக்கும் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கௌதம் கார்த்திக்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது பூஜையுடன் படம் துவங்கியுள்ளது. சிம்புவின் 45- வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது அதில் சிம்பு நரைத்த தாடியுடன் கருப்பு நிற வேட்டியுடன் உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ‘மஃப்டி’ படத்தில் இருக்கும் சிவராஜ்குமார் போன்றே லுக்கில் தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது சிம்பு, சிவராஜ் போன்றே நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் படம் தான் காப்பி என்றால் சிவராஜின் போஸை கூட சிம்பு காப்பி அடிப்பாரா என்று கிண்டலடித்து வருகின்றனர்.