ஒரு மனிதனின் உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள் என்று நடிகர் சிம்பு வைத்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்தபடத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
நன்றி தெரிவிக்கும் விழா:
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று நடத்தி இருந்தார்கள். இந்த விழாவில் சிம்பு கூறியிருந்தது, சாதாரண கமர்சியல் படங்களுக்கு தேவையான எதுவுமே இதில் இல்லை. இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்முறையாக ஒரு நாள் முன்னாடியே படத்தோட ktm கிடைத்தது. இது எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகில் தான் நான் வாழ்கிறேனா என்று தோன்றியது. ஏன்னா, அவ்வளவு வலியை நான் கடந்து வந்திருக்கிறேன்.
படம் குறித்து சிம்பு சொன்னது:
சினிமாவில் மட்டும் இல்லாமல் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சிம்பு உடலை குறைத்தார், நன்றாக நடித்தார் என்றெல்லாம் பலர் சொல்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் என்னைத்தான் வைத்து செய்தார்கள். நிறைய காட்சிகள் ஒரே சாட்டில் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்தால் உங்களுக்கே புரியும். மேலும், என்னுடைய நடிப்பை பார்த்து ஜெயமோகன் பாராட்டியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. எனது நடிப்புக்கு இதில் அதிக பாராட்டு வந்தது. இது எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
உடல் தோற்ற விமர்சனம்:
இன்னும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு மல்லி பூ தான். இப்படம் குறித்து எனக்கு ஒரு பயம் இருந்தது. தட்டிவிட நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க ஆட்கள் இல்லை. இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்களுக்காக நிறைய ஆக்சன் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது கேங்ஸ்டர் படம் கிடையாது. எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதே தான் முதல் பாகம். இந்த படத்தில் என் உடம்பை வைத்து யாரும் எழுத முடியாது. அந்த சில பேருக்காக தான் இதை சொல்கிறேன். ஒரு படத்தை விமர்சியுங்கள்.
சிம்பு குறிப்பிட்ட நபர்:
ஆனால், தனிப்பட்ட மனிதனுடைய உருவத்தை விமர்சனம் செய்வது ரொம்ப தவறு. தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்காதீர்கள் என்று சிம்பு கூறினார். இப்படி சிம்பு கூறியது வேற யாரும் இல்லைங்க, ப்ளூ சட்டை மாறன் தான். சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தை விமர்சனம் செய்யும் போது ப்ளூ சட்டை மாறன் சிம்புவையும், யோகியையும் கம்பேர் பண்ணி இதில் யார் ஹீரோவே? என்று தெரியவில்லை.
ப்ளூ சட்டையின் பதிலடி :
ரசிகர்கள் குழம்பி விடாதீர்கள் என்று கிண்டல் கேலி செய்திருந்தார். இதைக் குறித்து தான் தற்போது சிம்பு பேசியிருக்கிறார் என்று நெட்டிசங்கள் பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சிம்புவின் இந்த கருத்தை தொடர்ந்து சிம்பு நடித்த பாடல்களில் இடம்பெற்ற பெண்களை வர்ணிக்கும் வரிகளை குறிப்பிட்டு ப்ளூ சட்டை பல கேள்விகளை கேட்டு வருகிறார்.