ஹன்சிகாவிற்கு முத்தம் கொடுக்கும் சிம்பு. லீக்கான லேட்டஸ்ட் வீடியோ.

0
45721
Simbu-hansika
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா என்று தனது சித்து விளையாட்டை அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டு காதலுமே பிரேக்  அப் ஆகிவிட்டது. நயன்தாராவுடன் காதல் முறிந்த பிறகும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்திருந்தார்.  தற்போது இரண்டாவது காதலியான ஹன்சிகா படத்திலும் நடிக்கப்போகிறார் சிம்பு. ‘மெளனராகம்’ படத்தில் ரேவதியுடன் படம்முழுக்க மோகன் நடித்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கார்த்திக் வேடம், பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.

-விளம்பரம்-
Image result for simbu hansika"

‘மஹா’ படத்திலும் கார்த்திக் பண்ணியதைப்போல மிரட்டலான கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஶ்ரீகாந்த், ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார். சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : அந்த பொண்ணு செட் ஆகாதுன்னு அப்போவே சொன்னேன்- ஆண்டவன் புன்னியத்துல இப்போ ஒரு குடும்ப பெண் கெடச்சிடுச்சி – அழகப்பன்.

- Advertisement -

இந்த நிலையில் மஹா படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட காட்சியின் வீடியோ ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் ஹன்சிகாவிற்கு சிம்பு முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சிம்பு கெஸ்ட் ரோலில் தோன்றிய 90ml படத்தில் ஓவியவுடன் லிப் லாக் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹ்ம்ம் இந்த படத்திலும் சிம்பு கெஸ்ட் ரோல் தான் செய்றார், எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

இது ஒருபுறமிருக்க சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்த மாநாடு படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரங்கள் கூட வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிக்க சிம்புவிடம் பல்வேறு பஞ்சாயத்துகள் நடைபெற்றது. ஆனால், தனது முன்னாள் காதலி நடிக்கும் மகா படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் சிம்பு தவறாமல் கலந்து கொண்டார் என்பதுதான் மாநாடு படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement