அந்த பொண்ணு செட் ஆகாதுன்னு அப்போவே சொன்னேன்- ஆண்டவன் புன்னியத்துல இப்போ ஒரு குடும்ப பெண் கெடச்சிடுச்சி – அழகப்பன்.

0
136790
Amala-paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்று விட்டார் என்பது அனைவரும் விஷயம் தான். இந்த நிலையில் ஏ எல் விஜய் மற்றும் அமலா பால் பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ஏ எல் விஜய்யின் தந்தையும் நடிகருமான ஏ எல் அழகப்பன். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய்.

-விளம்பரம்-
Image result for amala paul marriage"

- Advertisement -

அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர்.

இதையும் பாருங்க : உடல் எடை குறைத்த குஷ்பு மகளின் லேட்டஸ்ட் போட்டோஸ். பாத்த ஷாக்காவீங்க.

ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் ஏ எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார். இந்த நிலையில் ஏ எல் விஜய் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்பவரை கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அமலா பால் மற்றும் ஏ எல் விஜய்யின் விவாகரத்து குறித்து ஏ எல் விஜய்யின் அப்பா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் ஏ ஆல் அழகப்பனிடம், உங்கள் பிள்ளைகள் கூட சினிமாவில் வரக்கூடாது என்று நீங்கள் நினைத்ததால் தான் ஒரு நடிகையை உங்கள் மகன் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லையா என்று கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த ஏ எல் அழகப்பன், எவ்வளவோ பிரச்சனைகள் போராட்டம் என்று இருந்தது. ஆனால், அந்தப்பெண் ஒத்துக் கொள்ளவே இல்லை. மேலும், இவனுடைய கேரக்டருக்கும் அந்த பெண்ணுடைய கேரக்டருக்கும் ஒத்து வராது என்று நினைத்தேன். மேலும் ,அந்த பெண்ணை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அந்தப் பெண் நமக்கு ஒத்துவராது என்று கூறினேன்.ஆனால், அவன் ஒப்புக் கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதேபோல அந்த பெண் திருமணத்திற்கு முன்னதாக கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி விடுவதாக கூறியிருந்தார். அதேபோல திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். எல்லாத்துக்கும் ஓகே மாமா ஓகே மாமா என்று தான் கூறியது. ஆனால், நான் மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது அங்கே சர்ச்சில் திருமணம் என்று பத்திரிகை அடித்து விட்டது. ஆனால், அதற்கும் நாங்கள் எதிர்ப்பு சொல்லாமல் விட்டு விட்டோம். அவன் ஒரு முடிவை எடுத்துவிட்டான் அதே போல பத்திரிக்கை கொடுத்து பின்னர் நிப்பாட்ட முடியுமா என்ன? அது போன்ற ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோம். ஆனால், அதன் பின்னர் அந்த பெண்ணும் வேண்டாம் என்று கூறி விட்டது இவனும் வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன் பின்னர்தான் ஒரு வருடங்களுக்கு மேல் இவனுக்கு பெண் பார்த்தோம் ஆண்டவன் புண்ணியத்தில் தற்போது குடும்பத்திற்கு தேவையான பெண் கிடைத்துவிட்டது .ஒரு நல்ல குடும்பம் அமைந்து சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அழகப்பன்.

Advertisement