மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் ரோட்டில் நடமாடிய நடிகர் சிம்பு – இதுவரை காணாத வீடியோ.

0
3983
Str
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் போன்ற பிரபல நடிகர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா.

-விளம்பரம்-

நடிகை மேக்னா ராஜ் மற்றும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

- Advertisement -

பின் உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 தேதி உயிரிழந்தார். தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

Shocking! Popular Kannada actor Chiranjeevi Sarja dies of heart attack! :  Cine Observer

மேலும், பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடன் நடிகர் சிம்பு மற்றும் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகிய மூவரும் தெருவில் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement