இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” திரைப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

அதிலும் குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் ஓராண்டிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால், எஸ் டி ஆர் ரசிகர்கள் குதூகுலமடைந்தனர். முதல் நாளன்று திரையரங்குகளில் பெரும்பாலும் சிம்புவின் ரசிகர்கள் தான் காணப்பட்டனர். இந்த படத்தை அவரது ரசிகர்கள் சிம்புவின் படமாகவே பார்க்கின்றனர்.

மேலும், சிம்புவின் ரசிகர்கள் சிலர் திரையரங்குளில் பாலபிசேகம்,கற்பூர தீபம் ஏற்றியதோடு ஒரு ரசிகர் முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு கிரேனில் தொங்கியபடி பாலபிஷேகம் செய்தார். இந்த படத்தின் விஜய் சேதுபதி மற்றும் சிம்புவுக்கு தான் அதிகப்படியான முக்கியத்துவம் இருந்தது.

Advertisement

Advertisement

மேலும், இந்த படத்தின் கதைப்படி கிளைமாக்ஸ் கட்சியில் போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, சிம்புவை சுட்டுகொன்றுவிடுவார். இந்த காட்சியின் போது திரை அரங்கத்தில் இருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள் விசிலடித்து கைத்தட்டுகின்றனர். இது வெறும் படம் தான் என்று உணராத சிம்பு ரசிகர்கள் இந்த காட்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நடிகர் விஜய் சேதுபதிக்கும் அவரது ரசிகர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்காக பேனர்கலை ஏந்தி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதில், விஜய் சேதுபதி ரசிகர்களை கண்டிக்கிறோம் என்றும் சிம்புவுக்கு ஒன்னுனா எவனா இருந்தாலும் வேற மாதிரி ஆயிரும் என்று எழுதப்பட்டுள்ளது.

Advertisement