தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கெளதம் மேனனும் ஒருவர். இவர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிக முக்கியமான படமாக இது அமைந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் போன்று ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் இதில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இதற்கும் இசை அமைத்து உள்ளார்.
இந்த குறும்படம் கார்த்திக் 10 வருடங்களுக்கு பிறகு ஜெஸ்ஸி-யிடம் பேசுவது போன்று எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 நிமிடத்துக்குள் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். முழுக்க முழுக்க மொபைல் போன் வழியாகவே டைரக்ட் செய்து முடித்துள்ளார் கௌதம் மேனன். இந்த ஷாட் பிலிம் தற்போது யூடியூப் தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. அந்த குறும்படத்தில் சிம்பு கதை எழுத உட்காருகிறார்.
ஆனால், தொடர்ந்து எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடனே கேரளாவில் உள்ள த்ரிஷாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். நீ வேண்டும் என்கிறார் சிம்பு. நீ என்னுடைய மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா. பேசி முடித்தவுடன் சிம்பு புது உற்சாகம் அடைந்து தொடர்ந்து கதை எழுதுகிறார். இது தான் குறும்படத்தின் கதை. இந்தக் குறும்படத்தை Youtube ல் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சில நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். சிம்பு திரிஷாவோட மூனாவது பிள்ளையாம். ஏமிரா இதி? என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். இந்த குறும்படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் கேப்போம்.