‘இப்போ நானும் ஹாலிவுட்ல நடிச்சிட்டா’ – சிம்புவின் லேட்டஸ்ட் பேச்சு. தனுஷ்ஷை தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்.

0
280
STR
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து இருந்தார்.

- Advertisement -

ஹாலிவுட் குறித்து சிம்பு :

இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிம்பு ‘நான் ஹாலிவுட்டி திரைப்படத்தில் நடித்தால், ஒரு ஹாலிவுட்டி நடிகராகிவிடுவேன். பின் அடுத்து என்ன?

ரசிகர்கள் கேள்வி :

இப்போதுள்ள அனைவரும் நான் பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என நினைத்து ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பெரிய ஆள் என்றால் என்னவென்று தெரியவில்லை. எனது வேலை நான் சிறப்பாக செய்தால், அது தான் பெரிய ஆளாக உயர்த்தும்’ என்று பேசி இருக்கிறார். சிம்புவின் இந்த பேச்சு தனுஷை தான் தாக்கி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கமண்ட் செய்து வருகின்றனர். மேலும், தனுஷ் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

தொடர்ந்து தனுஷை தாக்கும் சிம்பு :

சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்கும் ஆரம்பம் முதலே பல பனிப்போர் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது. என்னதான் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் என்று குறிக்கொண்டு வந்தாலும் சிம்பு அடிக்கடி தனுஷை படங்கள் மற்றும் நிஜத்தில் மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்டு தான் வருகிறார். ஈஸ்வரன் படத்தில் கூட சிம்பு, நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன் டா என்று தனுசை தாக்கி பேசியிருந்தார்.

அதே போல வெந்து தணிந்தது காடு படத்தின் விழாவில் பேசிய சிம்பு ‘நம்ம படத்த மாசு, கிளாஸ்னு நம்ம சொல்லக்கூடாது. மத்தவங்க சொல்லணும்’ என்று கூறியிருந்தார்.இவர் இப்படி சொன்னதற்கு காரணம் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் எது மாஸ் தெரியுமா என்று தனுஷ் சொன்னதை அப்போது சோசியல் மீடியாவில் பயங்கர டெம்ளேட்டுகளாக உருவாக்கியிருந்தது. தனுசை தாக்கி தான் சிம்பு சொல்லி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.

Advertisement