சிம்பு போன் செய்து , நிச்சயதார்த்தம், திருமணம் முடிந்துவிட்டது ! அதிர்ச்சி கிளப்பிய சிம்பு

0
2185
oviya-simbu

சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவர் நடிகர் சிம்பு. AAA பட சர்ச்சை முடிந்து சிறிது நாட்கள் ப்ரியாக இருந்தார் சிம்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓவியாவிற்கும் சிம்புவிற்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போல ஒரு போட்டோ வைரல் ஆனது.

simbu

அந்த சர்ச்சை தற்போது விஜய் டீவி மேடை வரை சென்றுள்ளது. விஜய் டீவியில் பொங்கல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் குயின் ஓவியா மற்றும் Road Side Romeos குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த சர்ச்சை குறித்து கேட்பதற்காக சிம்புவிற்கு போன் செய்து ஓவியாவிடம் குடுத்தனர். இது குறித்து கேட்டபோது, ஆம் நிச்சியதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என விளையாட்டாக கூறினார் சிம்பு. மேலும், ‘இங்க என்ன சொல்லுது, சிம்பு சிம்புன்னு சொல்லுதா’ என தந்து நெஞ்சில் கை வைத்து கூறினார் ஓவியா.

இருவரும் விளையாட்டாக கூறியதால் இருவருக்கும் திருமணமெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என தெளிவாகிறது.