புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி rose day என்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நடந்த இந்த ஆண்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் எழுந்து சென்ற நியூஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. எப்போதுமே சிம்பு அவர்கள் சினிமாவில் மட்டும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும், பிரஸ்மீட்டிலும் கலந்து கொள்வார். அந்த வகையில் தற்போது சிம்பு அவர்கள் நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நடந்த rose day விழாவில் கலந்து குழந்தைகளுடன் ஆடி பாடி மகிழ்ந்து உள்ளார்.

இதையும் பாருங்க : பொள்ளாச்சி பெண் கதறலின் டிக் டாக் சர்ச்சை முதல் நிற விமர்சனம் வரை – அனைத்தையும் கடந்து வென்ற சுந்தரி.

Advertisement

மேலும், கடந்த ஆண்டு தன்னை இந்த நிகழ்ச்சிக்காக அழைத்ததாகவும் தன்னால் வர முடியாத சூழல் இருந்தால் இந்த ஆண்டு கலந்து கொண்டதாகவும் சிம்பு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சிம்புவிடம் படத்தில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று டைட்டில் வருமே என்று கேள்வியை முழுதாக முடிப்பதற்கு முன்பே சிம்பு அவர்கள் நான் அதைப் பற்றியெல்லாம் இங்கே பேச வரவில்லை என்று சொல்லிவிட்டார்.

பிறகு நடிகர் சங்கம், மாநாடு படம் சம்பந்தமான கேள்விகள் கேட்டதற்கு உடனே சிம்பு அவர்கள் எழுந்து நின்று நான் சினிமாவை பற்றி பேச இங்கு வரவில்லை. நான் குழந்தைகளுக்காக தான் இங்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

Advertisement

தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement