பொள்ளாச்சி பெண் கதறலின் டிக் டாக் சர்ச்சை முதல் நிற விமர்சனம் வரை – அனைத்தையும் கடந்து வென்ற சுந்தரி.

0
5679
sundari
- Advertisement -

பொதுவாகவே எல்லா துறையிலும் பெண்கள் சாதிப்பதற்கு திறமை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையிலேயே பெண்களின் திறமையை பார்க்காமல் அவர்களின் நிறத்தை காரணம் காட்டி அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பெண்கள் மீது நிறம் குறித்த ஒரு திணிப்பு இன்று வரை இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் சினிமாவில் அதிகமாகப் பார்க்கிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தன் நிறத்தினால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என சாதித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா பற்றி தெரியாத பல விஷயங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது காமெடி திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியில் குற்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் கதறியதை கூட டிக் டாக் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதையும் பாருங்க : பிறந்தநாள் ட்ரீட்டாக படு கிளாமர் உடையில் புகைப்படங்களை பதிவிட்ட ஷாலினி பாண்டே.

- Advertisement -

மேலும், தொடர்ந்து இவர் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. பின் சின்னத்திரையிலும் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போதெல்லாம் இவருடைய நிறத்தை காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஆனால், திறமை இருந்தால் ஒரு நாளில் ஜெயிக்கலாம் என்று விடா முயற்சி உடன் போராடினார்.

gab

அப்போது தான் அவருக்கு நயன்தாராவின் ஐரா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு பல பாராட்டுகள் வந்து கொண்டிருந்தது. ஒரு படத்திலே இவருடைய மொத்த வாழ்க்கையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. பின் இவர் பல படங்களில் நடித்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
தன் கணவருடன் கேப்ரில்லா

நிறத்தால் பின்தங்கியிருக்கும் பல பெண்கள் சாதிக்கமுடியும் மற்றும் அவர்களுக்கும் சுயமரியாதை உண்டு என்ற கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் கேப்ரில்லாவுக்கு பல பெருமைகளை வாங்கித் தந்தது என்று சொல்லலாம். இவர் ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement