முதன் முறையாக தனது சகோதரியின் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு.!

0
3725
Simbu-sister
- Advertisement -

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்புவிற்கு , குரலரசன் என்ற தம்பி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அவருக்கு திருமணமும் நடைபெற்றது. சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார்.அதிலும் அவரது தங்கை என்றால் சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

-விளம்பரம்-
View this post on Instagram

?

A post shared by STR (@str.offcial) on

எப்போதும் தனது ரசிகர்கள் தான் எனக்கு மிக பெரிய பலம் என்று எப்போதும் கூறும் சிம்பு .சமீபத்தில் விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது சகோதரி இலக்கியாவின் மகன் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சிம்புவின் தங்கை இலக்கியா கடந்த பிப்ரவரி 2014 லில் அபிலேஷ் என்ற நபரை திருமனம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2017 ஆண்டு மார்ச் ல் 23 ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிம்பு தனது தங்கையின் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது ஆனால் உண்மையில் இது சிம்புவின் சகோதரி மகனா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-

.

Advertisement