DEMONETIZATIONக்கு சப்போர்ட் செய்த நடிகர்களை பாடலில் கலாய்த்த சிம்பு! என்ன பாடினார் தெரியுமா?

0
1558
simbu
- Advertisement -

கடந்த ஆண்டும் இதே நாள்(நவ்.09) 8 மணிக்கு , நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்தார்.
modi இது மிகப்பெரிய முட்டாள் தனம் என்று அப்போது பல பொருளாதார அறிஞர்கள் கண்டித்தனர். ஆனால், இந்த செயலை ரஜினி, கமல், சூரியா, தனுஷ் போன்ற நடிகர்கள் புதிய இந்தியா உருவாகிவிட்டது என உடனடியாக கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்து ட்வீட் போட்டனர். அதன் பின்விளைவுகள் தெரிந்து தான் அப்படி சப்போர்ட் செய்தார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், பின்னர் கமல்ஹாசன் அப்படி நான் அப்போது சப்போர்ட் செய்தது தவறான ஒன்று என ஒப்புக்கொண்டார்.

-விளம்பரம்-

இந்த டிமானிடைசேசனால் பல மாதங்கள் பாமர மக்கள் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை மாற்ற வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசளிலும் நாட்கணக்கில் நின்றனர். இதனைப் நேரம் காலம் கொடுத்து பின்விளைவுகளுக்கு ஏற்ப்படுகள் செய்து பண்ணியிருக்கலாம் என விமர்சனம் வைத்தவர் நடிகர்களில் விஜய் மட்டுமே.
simbu மேலும், இந்த நடவடிக்கையால் 100க்கும் மேற்ப்படோர் இறந்தது மட்டுமே மிச்சம். அப்போது கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்த ரஜினி, கமல், சூரியா போன்றோர் தற்போது தங்களது தவறை உணர்ந்திருப்பார்கள்.

- Advertisement -

இவற்றை எல்லாம் வைத்து அந்த டிமானிடைசேசனை கண்டித்து ஒரு ஆல்பம் சாங் பாடியுள்ளார் சிம்பு. இதில் ரஜினி, கமல், சூரியா ஆகியோர் செய்த சாப்போர்ட் கண்மூடித்தனமானது, பின்விளைவுகள் தெரியாமால் இப்படி சப்போர்ட் செய்யலாமா? எனவெல்லாம் கேள்விகளுடன் பாடியுள்ளார். அதே, போல் பணம் வங்குன மூதேவி எல்லாம் வெளிநாட்டுல ஜாலியா வாழுது, அதற்க்காக இங்க பாமர மக்களை அரசு வாட்டுது என 8000 கோடி மல்லையாவை போட்டி தாக்கியுள்ளார்.
simbu சிம்புவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் சரியான நேரத்தில் சமூக கருத்துக்களை அவருக்கு தெரிந்த வழியில் எப்போதும் சொல்லத்தவறுவதில்லை. அவருக்கு பிஹைன்ட் டாக்கீஸ் மீடியாவிடம் இருந்து ஒரு ராயல் சல்யூட்.

Advertisement