தலைப்போடு சேர்த்து சிம்புவின் தோற்றத்தையும் மாற்றிய கௌதம் மேனன் – கதறும் நெட்டிசன்கள்.

0
12599
simbu
- Advertisement -

சிம்புவின் 47படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் சிம்புவிற்கு விண்ணை தாண்டி வருவாயா படம் மூலம் ஒரு பெரிய திருப்பு முனையை கொடுத்தார்.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் ‘str47’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது GVM – STR கூட்டணி. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார். கௌதம் மேனன் – சிம்பு ஏ ஆர் ரஹ்மான், இந்த மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது. ஏற்கனவே சிம்பு – ஜிவி எம் இணைந்த இரண்டு படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர். தற்போது, இந்தக் கூட்டணியுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது. இதனால் இந்த படத்தின் டைட்டிலை மாற்றி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு ‘வெந்து தணிந்த காடு’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் சிம்பு பாலா படத்தில் வரும் நாயகனை போல படு கொடுரமான லுக்கில் இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது கௌதம் மேனன் படமா இல்லை பாலா படமா என்று கேலி செய்து வருகின்றனர். ஆனால், சிம்புவின் இந்த சேஞ் ஓவரை பார்த்து பலரும் மிரண்டு போய் தான் உள்ளனர்.

-விளம்பரம்-

சமீப காலமாக கௌதம் மேனன் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கி வருகிறது. இறுதியாக தனுஷ் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான ”என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவி இருந்தது. இதற்கு பின் வரும் அந்தாலாஜி கதைகளை மட்டும் தான் கௌதம் மேனன் எடுத்து வந்தார்.

Advertisement