மீண்டும் தள்ளிப்போன மாநாடு படத்தின் ரிலீஸ் – வருத்தத்துடன் தயாரிப்பாளர் போட்ட ட்வீட் (டிக்கெட் புக் பண்ணவங்க கதி )

0
212
maanaadu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வரும் சிம்பு சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இறுதியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆகவே ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி சுனிதாவா இது ? நீச்சல் குளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க.

- Advertisement -

மேலும், இந்த படத்திற்க்கான முன் பதிவுகளுக்கான டிக்கெட்டுகள் கூட மலமலவென விற்றுத்தள்ளியது. சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிம்பு, எனக்கு பல பிரச்சனைகள் கொடுக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க அழுத வீடியோவை கண்டு சிம்புவின் ரசிகர்கள் மனம் நொந்தனர். இருப்பினும் மாநாடு படம் பல தடைகள் கடந்து நாளை வெளியாக இருப்பதை எண்ணி கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நாளை மாநாடு படம் வெளியாவது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement