கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது எனவும் உத்தரவு போடப்பட்டு உள்ளது. கடைகள், உணவகங்கள், பொதுப்போக்குவரத்துகள், கோயில்கள் என அனைத்துக்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாமே தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. திருமணம் போன்ற சுப காரியங்களும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று வேறு தேதியில் மாற்றப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : ரஜினி வீடியோவை ட்விட்டர் நீக்கியது ஏன்? விளக்கமளித்த தமிழ்நாடு வெதர் மேன்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய கட்சியின் தொண்டர் ஒருவருக்கு இன்று எளிமையான முறையில் தன்னுடைய வீட்டிலேயே திருமணம் நடத்தி உள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரை அனைவரும் கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். ஒரு காலத்தில் இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இவர் படங்களில் நடிப்பதை விட்டு அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்தி வருகிறார். தேமுதிக கட்சியின் தலைவராக விஜயகாந்த் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரமாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டிலேயே நடந்துள்ளது. விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்கள் விமல், கமலி ஆகியோரை அழைத்து வரப்பட்டனர். மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டும் பங்குபெற்று எந்த ஒரு கூட்டமும் கூடாமல் திருமணம் நடந்து முடிந்தது.
இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் உணவுகள். சத்யராஜ் மகள் எப்படி இதெல்லாம் சொல்றார்னு கேக்குறீங்களா?
மத்திய அரசின் உத்தரவை ஏற்று மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து எளிய முறையில் இந்த திருமணத்தை நடத்தி உள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து இந்த திருமணம் நடைபெற்றது. பின் மணமக்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அரசு கோரிக்கை விடுத்து இருக்கும் இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. இதனை பார்த்து பலரும் விஜயகாந்த்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 5 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.