தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார். சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.
சிம்ரன் முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு பிரபு தேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான வி ஐ பி படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் , தமிழ் சினிமாவில் விஜய், அஜித் , சூர்யா , விக்ரம் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார் சிம்ரன். சொல்லபோனால் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்ட நடிகை சிம்ரன். தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், சிம்ரன் நடித்து பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.
இதையும் பாருங்க : மீராவிற்கு மத்திய அரசில் பதவி. வயிற்றில் அடித்து புலம்பும் ரசிகர்கள். என்ன தெரியுமா ?
சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.
மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன். பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதே போல எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை சிம்ரன் முதன் முறையாக தனது குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது மகன்கள் சிம்ரன் அளவிற்கு வளர்ந்து கண்டு ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர்.