திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றனர். ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பங்கேற்கவில்லை.

Advertisement

கலைஞர் அவர்கள் உடல் நல குறைபாட்டால் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பேட்டி ஒன்றில் பங்கேற்று சிம்பு ,கலைஞருடனான உறவு குறித்து பேசுகையில், கலைஞர் அவர்களுக்கு நான் மிகவும் செல்லம். அவருக்கு என்னை சிறு வயது முதலே தெரியும் என்பதால் அவரை, நான் ‘தாத்தா’ என்று தான் அழைப்பேன் என்று கூறியிருந்தார்.

கலைஞர் அவர்களுக்கு சிம்பு இவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்று சிம்புவேய கூறியிருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 8 ) நடைபெற்ற கலைஞரின் இறுதி ஊர்வதில் டி ஆர் மட்டும் தான் கலந்து கொண்டிருந்தார்.ஆனால், சிம்பு கலைஞரின் இறுதி சடங்கின் போது வரவில்லை. கலைஞருக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கும் சிம்பு, ஏன் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சிம்பு ஏன் அங்கு வரவில்லை என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. சிம்பு இன்று ராஜாஜி மண்டபத்திற்கு வந்ததுள்ளார். ஆனால், அவர் வந்திருந்த நேரத்தில் பிரதமர் மோடியும் அங்கு வந்திருந்ததால் அதே நேரத்தில் சென்றிருந்த சிம்புவால் கலைஞரின் உடலை பார்க்கமுடியாமல் போனதாம். அதன் பின்னர் ராகுல் காந்தி அங்கு வந்திருந்ததால் கலைஞரின் உடலை பார்க்க சிம்புவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவரின் வருகையின் போது நடிகர் சிம்புவும் கலைஞரின் உடலை காண சென்றதால், பிரதமரின் சில பாதுகாப்பு காரணத்தால் சிம்புவிற்கு கலைஞரின் உடலை பார்க்கும் அனுமதி மறுக்கப்பட்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement