தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதே போல சமீபத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்துவந்தன. இதனால் நெட்டிசன்கள் சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலேயே நடக்கிறது என்று அடிக்கடி மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சிங்கம் 2 படத்தில் நடித்த நடிகரை பெங்களுர் போலீசார் கைது செய்து உள்ளனர். சிங்கம் 2 படத்தில் டேனி என்ற வில்லனுடன் சிங்கம் 2 படத்தில் நடித்தவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த செக்யூம் மால்வின்.
இவர் விஸ்வரூபம், சிங்கம், அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி , பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதை பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக பெங்களுர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 கிராமுக்கு மேற்பட்ட எம்டிஎம்ஏ, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 மிலி ஹாஷ் ஆயில், செல்போன், ரூ. 2,500 ரொக்க பணம் மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட மல்வின் மருத்துவ விசாவில் இந்தியாவில் இருந்ததாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் இரண்டு மாத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் எச்.பி.ஆர் லேஅவுட்டில் தங்கியிருந்து மல்வினை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.