கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்ட ஜானகி.! தற்போதைய நிலை என்ன?

0
336
Janagi

பிரபல பின்னணி பாடகியான எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் , ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் மைசூருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த வாரம்சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக  கால் இடறி கீழேவிழுந்துள்ளார் ஜானகி. கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் ஜானகியை மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையும் பாருங்க : கடற்கரையில் தோழியுடன் படு மோசமான உடையில் கூத்தடித்து லட்சுமி ராய்.! 

- Advertisement -

சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜானகி, கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் நலமாக இருக்கிறேன். எனக்கு மைசூரு நகரை எப்போதும் பிடிக்கும். இந்நகரில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.

singer-janaki-discharged-from-hospital-after-surgery

வீட்டில் நுழையும்போது நான் கால் இடறி விழுந்துவிட்டேன். இதில் என் இடுப்பு எலும்பு முறிந்தது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார். ஜானகி விரைவில் குணமடைந்து வர நாம் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Advertisement