இந்திய அளவில் இசைத்துறையில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்தவர் எஸ் ஜானகி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இசைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால், இவருடைய இசைக்கு மயங்காத உயிரே இல்லை என்று சொல்லலாம். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் ஜானகி.
பின்பு குரலில் தடுமாற்றம் வந்தவுடன் இவரே இசைத்துறையில் இருந்து விலகிக் கொள்கின்றேன் என்று விலகிவிட்டார். இந்த நிலையில் இவர் இசை துறைக்கு வந்ததற்கான காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜானகி அவர்கள் ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவருடைய சிறு வயதில் ஒவ்வொரு ஊரிலும் சில சில ஆண்டுகள் மாறி மாறி வசித்து இருந்தார். காரணம், இவருடைய தந்தை ஆசிரியராக இருந்ததால் தான் இவரால் ஓரிடத்தில் வசிக்க முடியவில்லை.
ஜானகி தந்தை:
ஜானகிக்கு படிப்பில் பெரிய அளவிலும் விருப்பமில்லை. இதனால் இவர் தன்னுடைய தந்தையிடம் அடியும் திட்டும் வாங்கிக் கொண்டு இருந்தார். அதோடு இவருடைய அப்பாவிற்கும் ஜானகியை நினைத்து மிகவும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார். படிப்பில் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஜானகிக்கு இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவருடைய இசைஞானம் தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களை எல்லாம் ஜானகி பாடி அசத்தினார். இவருடைய ஆர்வத்தை பார்த்து எட்டாவது வயதில் நாதஸ்வர வித்துவான் இடம் அவருடைய தந்தை அனுப்பி வைத்தார்.
ஜானகியின் இசைஞானம்:
நீ சங்கீதம் கத்துக் கொண்டது போதும் நீயே சங்கீதம் தான். இனி உனக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க தேவையில்லை என்று குருநாதர் இவரை வாழ்த்தி இருந்தார். பின் இவர்கள் சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். அப்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் வேலைக்கு ஜானகி சேர்ந்தார். படிப்படியாக சினிமா பாடல் பாடும் வாய்ப்பு ஜானகி கிடைத்தது. 1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் ஜானகி பாடினார். அதனை தொடர்ந்து அவருடைய குரலில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருந்தார். மேலும், இவருடைய இளம் வயதிலேயே கடினமான பாடல்கள் எல்லாம் பாடி அசத்தி இருந்தார்.
சினிமா வாய்ப்பு:
ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை மணந்தார். அவர் தனது இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். மேலும் இவரது பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றார். இதய நிறுத்தம் காரணமாக 1997 இல் அவர் இறந்தார் . இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகியின் பெருந்தன்மை :
இவருடைய இசைஞானத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார். 1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், ‘இதே ஆண்டில் ‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார்.
ஒய்வு பெற்ற காரணம் :
எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என கூறி நெகிழவைத்தவர். அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி. திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என்று நாம் மட்டும் பாடி புகழையும், பணத்தையும் சம்பாதித்துக் கொண்டே இருப்பது நியாயம் இல்லை. வருங்கால சந்ததியினருக்கும் வழியிட வேண்டும். அடுத்தவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும் முன் என் வருங்கால தலைமுறைகளுக்கு புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன் என கடந்த ஆண்டு கூறியிருந்தார்.