மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி1950களில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது. அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் ‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி. ஏழு வயதில் இசையுலகில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல் இராம.நாராயணனின் ‘துர்க்கா’ படத்தில் சாலினிக்காக பாடியது.

அந்த படத்தில் இடம்பெற்ற ‘பாப்பா பாடும் பாட்டு, கேட்டுத் தலைய ஆட்டு’ என்ற பாடல் வரைத் தொடர்ந்து இனிமை மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காலத்தின் கோலம் அதன் பின் மழலைகளுக்கான பாடல்களோ படங்களோ வருவது குறைந்தது. அடுத்ததாக இசையுலகில் இளையராஜாவின் ஆதிக்கம் அதிகமாகி அதிகப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தபோது அவர், எம்.எஸ்.ராஜேஸ்வரியைப் புறக்கணிக்கவேண்டுமென்றே தீர்மானித்து எஸ்.ஜானகியை மழலைக் குரல்களைப் பாட வைக்கப்போய் இவருக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புக்கள் கைநழுவிப் போய் ஜானகிக்குக் குவியத்தொடங்கின.

Advertisement

அதனாலும் இந்த அற்புதப் பாடகி ஓரங்கட்டப்பட்டார். சங்கம் வளர்த்த மதுரையில் கர்நாடக சங்கீதக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இவரது தாயாரும் ஒரு பாடகி, நடிகை. இவரைத் இசையுலகிற்கு அழைத்து வந்தவர் இவரது குடும்ப நண்பரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு. 1947-இல் வெளிவந்த ஏவி.எம்.மின் ‘நாம் இருவர்’ படத்தில் ‘மஹான் காந்தி மஹான்’ என்ற பாடலே இவரது முதல் பாடல். இப்பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலமானது.

ஆனால் இவரது பெயர் இசைத்தட்டில் இடம்பெற்றிருக்காது. விஜயலட்சுமி என்ற ஒரு படத்தில் மட்டும் இவர் நடித்துமிருக்கிறார். நடிப்பதில் ஆர்வமில்லாததாலும், பாடகியாக மட்டுமே இருக்கவேண்டுமெனவும் நினைத்தபடியால் நடிப்பதை நிறுத்திவிட்டார். 1955-இல் வெளியான ‘டவுன் பஸ்’ திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல் ’சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல’. படம் எடுத்தவர் எம்.ஏ.வேணு; இயக்கியவர் கே.சோமு; கதை வசனம் ஏ.பி.நாகராஜன்; கதாநாயகன் என்.என்.கண்ணப்பா; கதாநாயகி அஞ்சலி தேவி. கதாநாயகி பாடுவது போலப் பாட்டு இருந்தாலும் சிறியவர் பெரியவர் அனைவரும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் வண்ணம் பாட்டின் இசை இருக்கவே, இது மிகவும் பிரபலமானது.

Advertisement

இதே பாட்டு சோகமாக ஒரு முறை பாடப்படும். அதனால் இந்தப் பாடலின் வரிகளும் இசை அமைப்பும் தனிப் பொலிவைப் பெற்றன. இதற்கு முன்னர் பல படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தாலும் இதையே தனது முதல் படம் என்று கூறிப் பெருமைப்படுவார். எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. அதுவும் இயற்கையாகவே அமைந்தது. குழந்தைக்கென குரலை மாற்றிப்பாடுவதில்லை.

Advertisement

இன்று வரை அவரைப் போலக் குரல் வளமுடைய இன்னொருவரைத் தமிழ் இசையுலகில் பார்க்க இயலாது.‘களத்தூர் கண்ணம்மா’வில் கமலஹாஸனுக்காக “அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே” பாடலைப் பாடியவர் இவரே. கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்’ என்ற பாடலும் மிக மிக இனிமையானதும், மிகவும் பிரபலமானதுமாகும்.அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ என்ற படத்தில் கே.பி.காமாட்சி சுந்தரம் எழுதிய ஒரு பாடலை மாதுரி தேவிக்காக பாடினார்.

‘இதயவீணையின் நரம்பை மீட்டியே இன்பம் சேர்த்திடும் காதல்’’ மிகப் பிரபலம். ஆனால் இசைத்தட்டில் கவிஞர், இசையமைப்பாளர் பெயர் இடம்பெற்றிருக்காது. பாடிய இவரது பெயர் மட்டும்தான் இடம்பெற்றிருந்தது. குட்டி பத்மினிக்காக ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில், ‘கோழி ஒரு கூட்டிலே” என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். ‘மகாதேவி’ படத்தில் சாவித்திரிக்காக “காக்கா காக்கா மை கொண்டா” மற்றும் “மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்)”, “மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே” போன்ற பாடல்கள் இவரது தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

சிரித்த முகம் படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய ‘ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கிவந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா’ என்ற பாடலுடன், ’மகாலட்சுமி’ என்ற படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய ’சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்’ என்ற பாடல், மாடர்ன் தியேட்டர்ஸாரின் ‘இரு வல்லவர்கள்’ படத்தில் ‘குவா குவா பாப்பா இவ குளிக்கக் காசு கேப்பா’ என்ற பாடல், ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் என்ற பாடல், பராசக்தி படத்தில், “ஓ, ரசிக்கும் சீமானே”, “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு விட்டுப் போனவரே” ஆகிய பாடல்கள் மூலம் ஜனரஞ்சகமான இதர பாடல்களையும் பாட வல்லவர் இவர் என்பது நிரூபணமானது.படிக்காத மேதை படத்தில் சௌகார் ஜானகி பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” பாடல் படத்திற்குக் களை கூட்டியது. ஏராளமான சிறப்பான பாடல்களை, குறிப்பாக குழந்தைக் குரலில் பாடிய சிட்டுக் குருவி குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு

Advertisement